அத்தியாயம்-1
திடிரென்று பயங்கர இடி முழக்கமும், அலரல் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது.
அதைக் கன்டு பயத்தின் உச்சத்திற்கே சென்று விட்டான் நிலவன்.
நள்ளிரவு நேரம் யாருமில்லா மலைப்பகுதியில் தன் தம்பி தங்கையுடன் வசித்து வந்த அவன் கடும் பயத்தில் உறைந்து போயிருந்தான வெண்பௌர்ணமி இரவு அதில் ஏன் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படி நடக்கிறது என யோசித்து கொண்டிருந்தான்.
நிலவனை பற்றி சொல்ல வேண்டுமானால் 21 வயது வாலிபன். தன் தம்பி இனியன், தங்கை தென்றலொடும் வாழ்ந்து வருகிறான். கடந்த 10 வருடங்களாக மூன்று பெரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
"பத்து வருடத்திற்கு முன்பு ஆழி மலை கோயிலுக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் மகிழ்ச்சியோடு வேண்டுதலை நிறைவேற்றி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.திடிரென்று பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது.
இடி மின்னல் ஓசையில் அனைவரும் உறைந்து போயினர்.அப்போது அவர்களால் நகர கூட முடியாத அளவுக்கு கும்மிருட்டாக இருந்தது. அப்போது அவனது தங்கை வேறொரு திசையில் உற்று நோக்கி கொண்டிருந்தாள்.
அங்கே மின்மினி பூச்சிகள் மின்னின. அந்த இரவிலும் வண்ணத்து பூச்சிகள் பறந்து திரிந்தன.
அப்போது திடிரென ஒரு அலறல் கேட்டது.
‘’என்னை காப்பாற்றுங்கள்! என்னை காப்பாற்றுங்கள்!’’ என ஒரு பெண்ணின் கூக்குரல் கேட்டது.
நிலவனின் தந்தை அழுகுரல் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மற்ற மூவரும் அவரை பின் தொடர்ந்தனர்.
அப்போது அங்கே நிலவன் தந்தை முன் திடிரென ஒரு பெண் உருவம் வந்து நின்றது. அந்த பெண் உருவத்தை கண்டதும் நிலவனின் தாய்,தந்தை மற்றும் மாமா மூவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அந்தப் பெண் அம்மூவரிடமும் பேசத் தொடங்கியது.
“ஏன் எதற்காக இப்படி செய்தீர்கள்” என்று கேட்டது.
“எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை”
அதனால் தான் அப்படி செய்தோம் அவனின் கூறினார்.
தங்களை மன்னிக்கவும் வேன்டினார்.
அனால் அவளோ அவனது தாய்இதந்தை இருவரின் மீது கையை வைத்தாள். அவர்கள் இருவரும் காற்றில் மறைந்து போயினர்.
அவனது மாமா நிலவனையும், தம்பி,தங்கையும் அந்த பெண்ணிடமிருந்து காப்பாற்றி கொண்டு வந்து விட்டார்.
அதன் பின் எந்தவொரு சம்பவமும் நடக்க வில்லை, இப்படியே வருடங்கள் ஓடின.
திடிரென நினைவு வந்தவனாய் சகச நிலைக்கு வந்தான். அவனது தம்பி,தங்கை இருவரும் பயத்திலே இருந்தனர்.
இவர்களுக்கு என் இப்படி நடக்கிறது, எதற்காக நடக்கிறது, என்ன நடக்கிறது என எதுவுமே தெறியாமல் பயத்தில் பிரமை பிடித்தது போல் இருந்தனர்.
எல்லாம் மறந்து கொண்டு இருக்கும்போது இப்படி நடந்தது, அவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது,
வயதில் சிறியவர்கள் என்பதால் ஏன் இப்படி நடக்கிறது ? என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர்.
ஆனால் அங்கே எதோ விபரிதம் நடக்க இருப்பதை உணர்ந்தனர்.
"ஆனால் அங்கே திடீரென்று அழுகுரலும், நரியின் ஊளையிடும் சத்தமும்,விலங்குகளின் பயமுறுத்தும் ஓசையும் எல்லா பக்கமும் வந்து கொண்டே இருந்தது".
அந்நிகழ்வு அவர்களை பயத்தின் உச்சதிற்கே கொண்டு போனது.
அவ்விரவில் அந்த காடே அதிர்ந்தது.
அதிர்ச்சியிலிருந்த அவர்களுக்கு ஆறுதலாய் அங்கே அவனின் மாமா ஒரு சில கருவிகளோடும் ஒரு புத்தகத்தோடும் அங்கே வந்தார்.
மூன்று பேரையும் கூட்டிக் கொண்டு வீட்டிற்குள் வந்தார். இப்படியாக அவர்களின் வாழ்க்கை சகோதரன், சகோதரியோடு தொடங்க ஆரம்பித்தனர்.
மூவரும் அவர்களின் மாமாவிடம் தன் தாய் தந்தையருக்கு என்ன நடந்தது என கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவரோ அதைப் பற்றி எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தார்.
ஆனால் சிலர் பொருள்களையும், ஒரு புத்தகத்தையும் தந்து இதனை சில வருடம் கழித்து நேரம் வரும்போது அந்த பொருட்களையும் பயன்படுத்துமாறும், அந்த புத்தகத்தையும் படிக்குமாறும் கூறினார்.
"அவர்கள் எவ்வளவோ முயன்றும் அந்த புத்தகத்தை திறக்கவே முடியவில்லை".
ஒருமுறை அதை திறந்த போது அது வெறும் வெள்ளை காகிதமாக எதுவும் இல்லாமல் இருந்தது.
தன் தாய் தந்தையருக்கு என்ன நடந்தது- ஏன் நடந்தது என மனதில் பல கேள்விகளோடு பல வருடத்தைக் கழித்தனர்.
நிலவனும் அவனது தம்பி,தங்கையும் வளர ஆரம்பித்தனர்.
இப்படியாக அவர்களை கவனமாக பார்த்து பாதுகாத்து வந்தான்.
அவர்களின் தோட்டத்தில் காய்கறிகளை பயிர்pடுவதும் அதை சந்தையில் விற்று வரும் பணத்தை வைத்து வாழ்ந்து வந்தனர். அவர்களின் வீடோ ஊரை விட்டு வெகுதூரம் தள்ளி இருந்தது.
" வானுயர்ந்த மலை, அழகான அருவி, சிதறியோடும் நதி, மரங்கள் நிறைந்த சோலை, கீச்சிடும் பறவைகள், தேன் நிறைந்த மலர்களில் தேனை சுவைக்க ரீங்காரமிடும் வண்டுகள், துள்ளியோடும் விலங்குகள்" என பூலோக சொர்க்கத்தில் வாழ்ந்து வந்தனர்.
அதனாலோ என்னவோ அவர்களுக்கு பெற்றோரின் இழப்பு பெரிதாக பாதிக்காமலே இருந்தது.
ஆனால் இன்று மறுபடியும் அந்த பயங்கரம் நடந்ததை நினைத்து நிலவன் மிகவும் அச்சம் கலந்த பயத்தோடு இருந்தான். என்ன நடக்கிறது என பார்ப்பதற்காக தன் தம்பி,தங்கையை வீட்டிலேயே பத்திரமாக இருக்க வைத்து விட்டு வீட்டிற்கு வெளியே இருந்த மரத்தின் மீது ஏறினான் அவன்.
வானுயர்ந்த மரமாக இருந்த அந்த ஆலமரம் படர்ந்து விரிந்து காணப்பட்டது. மரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த மேடையின் மீது ஏறி பார்க்க ஆரம்பித்தான்.
அது பார்ப்பதற்கு மேகத்தின் மேல் அமைக்கப்பட்டதைப் போல் இருந்தது. குளிர்ந்த மேகங்கள் அவனை வருடி சென்றது.
திடிரென அவன் தோள் மீது யாரோ கையை வைப்பதைப் போல் இருந்ததும், பயத்தில் திடிரென திரும்பி பார்த்தான்.
அவன் இதயம் படபடத்தது.
அங்கே அவன் தம்பியும், தங்கையும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் தான் என தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
மூவரும் அமைதியாக உட்கார்ந்து பயத்தோடு கீழே பார்க்க ஆரம்பித்தனர். அங்கே சில குதிரைகளும், அதன் மீது சில வீரர்களும் இருந்தனர்.
கருமை நிறம் மற்றும் அடர் வெள்ளை நிறத்தில் அக்குதிரைகள் ஜொலித்தன.
அதன் மீது இருந்தவர்கள் நீளமான வாள், வித்தியாசமான உடைகளோடு இருந்தனர்.
பார்ப்பதற்கு தேவதைகள் போல் இருந்தனர். வட்டமாக நின்று ஏதோ உரத்த குரலில் சொல்லி கொண்டிருந்தனர்.
உற்று கவனித்த போது அந்த இடி,மின்னல் அவர்களின் நடுவில் கேட்டது.
மின்னலும் அவர்களின் நடுவே பல வண்ணங்களில் அவர்களின் நடுவே தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தது.