நினைவெனும் இருளில் அவள்
சிறு நீரினை போலவே! என்னில்💞
கடலாய் மாறினாள் அவள்...
சில தாகங்கள்,சோகங்கள் ஏனோ 💞
கண்ணால் காட்டினாள் !
ஏ! பெண்ணே! என்னில் நீயே !
ஏனடி பெண்ணே என்னில் வந்தாய் ?
இரவும் பகலும் ஏக்கத்தை தந்தாய் !
என் நினைவினில் வலியினை தந்தது ஏனோ ?
இருளாய் மாறியதோ உன் நினைவெனும் என் பகல் ?
காத்திடும் காலங்கள் கனவாய் போனதோ...
நொடிகளில் தோற்பதை நித்தமும் வெறுக்கிறேன்..
நான் அங்கு சிரித்தால் ஏனோ முறைப்பாள்..
அவளின் பாதையை தேடியே அலைந்தேன்...
திக்கி திணறி அவளிடம் நுழைந்தேன் !
சிரிக்கும் பார்வையினில் சிறையினில் அடைப்பாள்...
சிறு சிறு குறும்புகள் என்னில் நிறைப்பாள் !
எந்தன் உயிரினை உன்னில் தேடி
உந்தன் முன்னே பல கானங்கள் பாடி !
நீ என் உலகமாய் மாறினாய்...
பல யுகங்களாய் என்னை தேடினேன் உன்னில்...
By Tribal King


No comments:
Post a Comment